பணத்தை கொட்டும் வோக்ஸ்வேகன் நிறுவனம்!!!
பிரபல வோக்ஸ்வேகன் நிறுவனம் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் தனது மின்சார கார் உற்பத்தியை விரிவுபடுத்த இருக்கிறது.இதற்காக 5 ஆண்டுகளுக்கு சேர்த்து 193 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக கொட்டுகிறது. ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம்,டெஸ்லா நிறுவனத்துக்கு போட்டியாக பேட்டரி தயாரிப்பு மற்றும் மின்சார கார்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்களில் 50 விழுக்காடு மின்சார கார்களாக மாற்றும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மூலப்பொருட்கள் உற்பத்தி மற்றும் பேட்டரி சார்ந்த உற்பத்திகளுக்காக அதிக தொகையை ஒதுக்குவதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தங்கள் கார்களில் உயர் ரகங்களுக்கு மட்டும் பிரத்யேகமான மென்பொருள் தயாரித்து வருவதாக அந்த நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது. மிகப்பெரிய சரிவை அந்தநிறுவன பங்குகள் பெற்றிருந்தாலும் அதிக தொகையை பேட்டரி உற்பத்திக்கு செய்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. ஐரோப்பாவில் பிரபலமாக திகழும் அந்தநிறுவனம் அமெரிக்காவின் வடக்குப்பகுதியில் உற்பத்தியை துவங்கினால் ,உலகின் பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஏதுவாக இருக்கும் என்றும் கருதி வருகிறது. பல நாடுகளில் இந்த நிறுவன கார்களை தயாரிப்பதில் விநியோக சங்கிலியில் பிரச்னை உள்ளது. இருந்த போதிலும் பெருந்தொகையை போக்ஸ்வேகன் மூலதனமாக சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.