காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி சற்று டல் அடிக்கிறது என்றே சொல்ல வேண்டும், பல பெரிய நிறுவனங்களே புராஜெக்ட் கிடைக்காமல் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.இந்த சூழலில் வேலை கிடைக்கும் என்று கனவோடு காத்திருக்கும் fresherகள் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் 2022-ல் வேலைக்கு எடுக்கப்பட்ட ஆட்களே இதுவரை பணியில் வந்து சேர அழைப்பு வராததால் மக்கள் குழுப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். புதிய வேலையை எப்போது தொடங்கி, எப்போது துறையில் வல்லவர்களாவது என்று இளைஞர்கள் மத்தியில் வெறுப்புதான் உருவாகியுள்ளது கடனை வாங்கி படித்து முடித்த இளைஞர்கள் கடனுக்கு வட்டியும்,முதலும் கட்டமுடியாமல் இதனால் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். படித்து முடித்ததும் மகனோ மகளோ சம்பாதிக்கத் துவங்கிவிடுவார்கள் என்று காத்திருக்கும் பெற்றோருக்கும் இது பேரிடியாக அமைந்திருக்கிறது. இன்போசிஸ் மாதிரியான பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் சேர அழைக்கப்பட்ட இளம்பணியாளர்களுக்கு வேலை கொடுப்பதில் தாமதம் செய்து வருகின்றனர். சில குடும்பங்களில் படித்து முடித்த இளைஞன் எப்போது வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஆனால் பெரிய நிறுவனங்கள் புதியவர்களுக்கு தற்போது வேலை அளிக்கவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது வேலை கிடைத்தும் எப்போது பணியை துவங்குவது என்று புரியாமல் சில இளைஞர்கள் மன வருத்தத்தில் தவறான முடிவுகளை கூட எடுத்துவிடுகின்றனர்.விப்ரோ,எம்பாசிஸ்,உள்ளிட்ட நிறுவனங்களிலும் இதே நிலைதான் இந்த சிக்கல்களுக்கு நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.