3.5 பில்லியன் டாலர் கொடுத்த வால்மார்ட்…

பின்னி பன்சால் மற்றும் அவரின் நண்பர்களால் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருந்தது. இந்நிலையில் மொத்தம் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை பின்னி மற்றும் சிலருக்கு அளித்ததாக வால்மார்ட் நிறுவனம், பங்குச்சந்தை ஆணையத்தில் தகவல் தெரிவித்துள்ளது. Accel,tiger globalmanagement ஆகிய நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வால்மார்ட்டிடம் விற்றுவிட்டன. இதனை வால்மார்ட் நிறுவன அதிகாரிகளும் உறுதிசெய்துள்ளனர். 2018ஆம் ஆண்டு பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வால்மார்ட் வாங்கியிருந்தது.தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் 80 விழுக்காடு பங்குகள் வால்மார்ட் நிறுவனத்திடம் இருக்கிறது.
ஜூலையுடன் முடிந்த அரையாண்டில் மட்டும் 0.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பங்குகளை ஈக்விட்டிகளாக வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. 5 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில் பின்னி பன்சால் புதிதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக்சல் நிறுவனம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்திருந்த நிலையில் 20 மடங்கு லாபமாக பெற்றதாக கூறப்படுகிறது. 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு டைகர் குளோபல் நிறுவனம் லாபம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.