வீட்டில இருந்தே வேலை செய்யணுமா?
ஓயாம மீட்டிங் பேசிகிட்டே கெடக்காங்க இவங்க என்னதான் வேலை பாக்குறாங்க என பலரும் கேலி செய்து வந்தாலும், பல ஆயிரம் கோடி ரூபாயை கொட்டிக்கொடுக்கிறது ஐடி துறை. இந்த துறையில் முக்கிய இடத்தை கொண்டுள்ளது இந்திய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த காலம் முதல் வீட்டில் இருந்தே பணியாளர்களை வேலைவாங்கி பழகிவிட்ட இந்த நிறுவனத்தில் அண்மையில் work from home பாலிசி மாற்றி அமைக்கப்பட்டது. வாரத்துக்கு 3 நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்யச் சொல்லும் இந்த நிறுவனம், தனது பணியாளர்களை சுழற்சி முறையில் அலுவலகத்துக்கு வரச் சொல்கிறது. மாதத்தில் 12 நாட்கள் அலுவலகம் வராத பணியாளர்களுக்கு மெமோக்களையும் அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள டிசிஎஸ் செய்தித் தொடர்பாளர், 2 ஆண்டுகளில் ஏராளமானோர் தங்கள் நிறுவனத்தில் சேர்ந்துள்ளதாகவும்,அவர்களுக்கு வேலை இட சூழல் எப்படி இருக்கும் என்பதை காட்டவேண்டும் என்பதற்காகவே பணியாளர்களை அலுவலகத்துக்கு வரச்சொல்லி இருப்பதாகவும், அலுவலகம் வந்தால்தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஹைப்ரிட் மாடல் நன்றாக வேலை செய்வதாகவும் டிசிஎஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை முடிந்த காலகட்டத்தில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 195 பேர் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.