ஐபோன் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை..
இந்தியாவில் ஆப்பிள் ஃபோன்கள் பயன்படுத்தி வருவோருக்கு மத்திய அரசின் CERT-IN அமைப்பு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது. CIAD-2024-0027என்ற பெயரில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆப்பிள் ஐபேட்,மேக், ஐபோன்கள் மற்றும் அது சார்ந்த மென்பொருள் கட்டமைப்புகளில் மிகப்பெரிய ரிஸ்க் உருவாக இருப்பதாக கூறியுள்ளது. எந்த வகையான ரிஸ்க் என்றால், போனின் மொத்த இயக்கத்தையும் வேறொரு நபர் செய்யும் அளவுக்கு பெரிய ரிஸ்க் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை கருத்தில் கொண்டு தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. காண்டேக்ட்கள், நீங்கள் என்ன பிரவுசிங் செய்தீர்கள், நிதி சார்ந்த தகவல்களையும் மக்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் தாக்குதல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐஓஎஸ்,ஐபேட் ஓஎஸில் 16.7.8 மற்றும் 17.5 ஆகிய வெர்ஷன்கள், மேக் ஓஎஸில் 12.7.5 வெர்ஷனிலும், வெண்டுரா வெர்ஷன் 13.5.7 சபாரி 17.5 வெர்ஷனிலும், ஆப்பிள் டிவியில் 17.5 வெர்ஷனுக்கு முன்பு உள்ள சாதனங்களும் இந்த அபாயத்தில் சிக்க இருக்கின்றன. புதிய வெர்ஷன்களை தரவிறக்கம் செய்துவிட்டால், இந்த அபாயத்தில் இருந்து தப்பலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய
அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருக்கின்றன. தேவையற்ற லிங்குகளை தொட வேண்டாம் என்றும், தெரியாத மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் பாஸ்வேர்டுகளை வலுவானதாகவும்,பாதுகாப்புடன் செயல்படவும் CERT அமைப்பு எச்சரித்துள்ளது