செபி எச்சரிக்கை..
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு செபியிடம் இருந்து ஒரு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பேடிஎம் நிறுவனத்துக்கும் தற்போது இயங்காமல் முடக்கப்பட்டுள்ள பேடிஎம் பேமண்ட் வங்கிக்கும் இடையே கடந்த 2022 நிதியாண்டில் நடந்த பணப்பரிவர்த்தனை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
செபியின் இந்த எச்சரிக்கை என்பது பேடிஎம்மின் விதிமீறல்கள் உள்ளதா என்பது குறித்து தொடர்ச்சியாக கண்காணித்த பிறகே அளிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதமாகும். 2 பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 324 கோடி ரூபாய் ஒரு பரிவர்த்தனையும், 36 கோடி ரூபாய் ஒரு பரிவர்த்தனையும் நடத்தப்பட்டது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன, 2021-22 நிதியாண்டில் தணிக்கை குழு அல்லது பங்குதாரர்களை கேட்காமல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது,. மேலே கூறிய குற்றச்சாட்டுகளை செபி தீவிரமாக கருத்தில் கொள்வதாகவும், இது தொடர்பாக சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ன என்று பேடிஎம் நிறுவனம் கடிதம் எழுத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை கடிதத்தால் நிதி மற்றும் செயல்பாடுகள் பாதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள பேடிஎம் நிறுவனம், வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் பதில் கூறப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை நிலை நாட்டுவோம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. திறந்த நிலையில் செபிக்கு பதில் அளிக்க இருப்பதாகவும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.