“வாரன் 65″ஏன் முதலீடு செய்வது முக்கியம்
முதலீடு மிகப்பெரிய விஷயம் என உலகிற்கே காட்டியவர் வாரன் பபெட். அவருக்கு தற்போது வயது 93. அவருக்கு ஒன்றும் ஒரே நாளில் கோடிகளில் பணம் கொட்டவில்லை. அவரின் மிகப்பெரிய ஆயுதமே நேரம் தான். வாரன் குறித்து சைக்காலஜி ஆஃப் மனி என்ற பெயரில் புத்தகம் வெளியாகி உள்ளது. அதில்,65வயதில் வாரன் ஓய்வு பெற்று இருந்தால் , வாரனின் வளர்ச்சி இப்போது போல இருந்திருக்காது என்று கூறப்படுகிறது. தற்போது வாரணிடம் 132பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து உள்ளது. வாரனின் சம்பாத்தியம் உயரமான மலையில் இருந்து சரியும் பனிக்கட்டி போல என்றும் எவ்வளவு உருளுகிறதோ அவ்வளவு பெரிய வளர்ச்சி என்றும், காலம் தான் அதை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக உள்ளது. எத்தனை இளம் வயதில் சேமிக்க முடியுமோ அத்தனை பெரிய தொகை கிடைக்கும் என்றும் , வாரன் 11வயதில் பங்குச் சந்தை துறையில் நுழைந்தார் என்றும் அந்த புக் கில் கூறப்பட்டு உள்ளது. 65வயதுக்கு மேல் தான் வாரணுக்கு கோடிகளில் சொத்தாக பணம் கிடைத்தது என்றும் அந்த புக் கூறி முடிக்கிறது.