பெர்க்க்ஷயர் ஹாத்வேயில் முதலீட்டை அதிகரிக்கிறார்களா வாரன் பஃபெட்டும், சார்லி முங்கரும்?
நீண்டகால கூட்டாளிகளும், புகழ்பெற்ற முதலீட்டாளர்களான வாரன் பஃபெட்டும், சார்லி முங்கரும் பெர்க்ஷ்யர் ஹாத்வே நிறுவனத்தில் 245 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்திருப்பதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு அந்த நிறுவனத்தின் மதிப்பையும், அதன் பங்குகள் உயரப் போவதையும் காட்டும் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
சீனாவை சேர்ந்த ஹிமாலயா முதலீட்டு நிர்வாகத்தின் தலைவர் லீ லீயூ சுமார் 9 லட்சம் ‘பி’ வகுப்பு பங்குகளை கடந்த காலாண்டில் வாங்கியிருக்கிறார். வாரன் பபெட், லீ- யின் குருவாவார். 1993ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் உரையை கேட்ட பின்பு ஒரு தொழில்முறை முதலீட்டாளராக மாறினார். 2019 இல் முங்கர் அவரை “சீன வாரன் பஃபெட்” என்று அழைத்தார்.
கடந்த தசாப்தத்தில் பெர்க்ஷ்சயரின் சிறந்த முதலீடுகளில் ஒன்றாக இருந்த சீன மின்சார வாகன நிறுவனமான BYD- யை முங்கர்க்கு, லீ அறிமுகப்படுத்தினார். லீ தனது புதிய பங்குகளின் அளவை கருத்தில் கொண்டு சில லாபங்களைப் பெற BYD பங்குகளை சுமார் 320 மில்லியன் டாலருக்கு விற்றார். பெர்க்ஷ்யர் நிறுவனம், ஹிமாலயா நிறுவனத்துடன் கன கச்சிதமாக பொருந்திப் போனது. 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் காலாண்டு புதுப்பிப்புகளை தாக்கல் செய்ய தொடங்கியதில் இருந்து ஹிமாலயா நிறுவனம், பெர்க்ஷ்யரில் அதன் போர்ட்ஃபோலியோவை பட்டியலிடுவது இதுவே முதல் முறை.
இவ்வளவு காலத்திற்கு பிறகு லீ ஏன் பங்குகளை வாங்க முடிவு செய்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. லீ யின் நம்பிக்கையை பஃபெட் வரவேற்கக் கூடும். ஏனெனில் 2020 ஆம் ஆண்டு தொற்றுநோய் பங்குச்சந்தையை பாதித்த போது பெர்க்ஷ்யரின் தலைவரான அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பெர்க்ஷ்யர் கடந்த காலாண்டில் 2 மில்லியன் ஈக்குவிட்டிகளை விற்றது. உண்மையில் நிறுவனம் இந்த ஆண்டு தனது பங்குகளில் ஒரு சாதனை அளவான 25 மில்லியனை மீண்டும் வாங்கும் முயற்சியில் இருக்கிறது.