வாரன் பஃபெட்டின் சொத்துமதிப்பு உயர்வு..

உலகளவில் நன்கு அரியப்பட்ட முதலீட்டு நிபுணரான வாரன் பஃபெட்டின் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் வாரன் பஃபெட் பங்குச்சந்தைகளின் மூலம் கிடைத்த வருமானம் மட்டும் 36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. கெய்கோ கார் இன்சூரர் உள்ளிட்ட சில நிறுவனங்களில் அவர் செய்த முதலீடுகள் கிட்டத்தட்ட 38%அதிகரித்துள்ளன. பிற முதலீடுகள் கிட்டத்தட்ட 6 மடங்கு உயர்ந்துள்ளது.கிளேடன் ஹோம்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் சரிவை சந்தித்தாலும் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் வாரனை இன்னும் பணக்காரர் ஆக்கியுள்ளது.
BNSFரயில் திட்டத்தில் வாரனின் பெர்க்ஷைர் நிறுவனம் அதிக முதலீடு செய்திருக்கிறது. அதன் முடிவுகளின்படி 24%நஷ்டம் ஏற்பட்டுள்ளது 8 பில்லியன் அமெரிக்க பங்குகளை பெர்க்ஷைர் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் விற்பனை செய்திருக்கிறது.இதன் மூலம் மட்டும் 147.4பில்லியன் அளவுக்கு பணம் கிடைத்திருக்கிறது. வாரன் பஃபெட் எதையெல்லாம் செய்கிறாரோ அவற்றை அப்படியே காப்பியடிக்க உலகம் முழுவதும் பலரும் உள்ள நிலையில் இவரின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் கவனம் ஈர்த்திருக்கின்றன. வரும் 30ஆம் தேதி வாரனுக்கு 93வது பிறந்தநாள் வருகிறது. 117.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துமதிப்பை இவர் வைத்துள்ளார். மேலும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் தரவுகளின்படி உலகளவில் 6ஆவது பெரிய பணக்காரர் என்ற பட்டியலிலும் வாரன் உள்ளார். இரண்டாவது காலாண்டின் வருவாய் 7% உயர்ந்து 10.04 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது.இது கடந்தாண்டு 9.42 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளில் மட்டும் 353 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கெய்கோ நிறுவனம் 514 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வருவாய் கிடைத்திருக்கிறது பெர்க்ஷைர் நிறுவனத்தின் ஏ பிரிவு பங்குகளின் மதிப்பு மட்டும் 533600 டாலராக உள்ளது. இது 14 சதவிதம் அதிகமாகும். ஆற்றல்,பெட்ரோலியத்துறை பங்குகளில் மட்டும் பெரிய தொகையை வாரன் முதலீடு செய்திருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இத்தனை பெரிய தொகை கிடைத்தும் பங்குச்சந்தை மதிப்பீடுகளை வாரன் விரும்புவதில்லை என்று கூறப்படுகிறது.