டெஸ்லாவில் வாரன் முதலீடு?
பிரபல பணக்காரர் என்று வர்ணிக்கப்படும் டெஸ்லா நிறுவனத்தின் முதலாளி எலான் மஸ்க், பெர்க்ஷைர் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாக லாபத்துக்கு சிங்கி அடிக்கும் மஸ்க், பணத்தை மிச்சப்படுத்த தனது பணியாளர்களையெல்லாம் வேலையை விட்டு விரட்டிவிட்டார். இந்நிலையில் பெர்க்ஷைர் நிறுவனம் ஆப்பிள் நிறுவன பங்குகளை விற்றுவிட்டு அதற்கு பதிலாக டெஸ்லாவில் முதலீடு செய்யலாம் என்று டிவிட்டரில் பதிவிட்டார். இதை குறிப்பிட்ட மஸ்க் நல்ல முடிவுதானே என்று கேட்டுள்ளார். வாரன் பஃபெட் டெஸ்லாவில் முதலீடு செய்வது சிறந்த முடிவாக இருக்கும் என்றும் மஸ்க் கூறியுள்ளார். பிரபல முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனம் சீன மின்சாரகார் நிறுவனமான பிஒய்டி நிறுவன பங்குகளை வைத்துள்ளார். ஆனால் அவரின் நிறுவனத்தில் டெஸ்லா நிறுவன பங்குகள் இல்லை.
திடீரென அமெரிக்காவில் இருந்து சீனா சென்ற மஸ்க் ,அங்கு அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்தார். இந்நிலையில் அண்மையில் நடந்த பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில், ஆப்பிள் நிறுவனத்தில் சிறு அளவிலான பங்குகளை விற்றுவிட்டதை வாரனே ஒப்புக்கொண்டார். இந்த சூழலில் டெஸ்லாவில் வாரன் முதலீடு செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.