அதான் வித்தாச்சில்ல இன்னும் எம்புட்டு நாள் டேரா போடுவீங்க!!!
அரசுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கைப்பற்றி வரலாற்று சாதனை நகிழ்த்தியது. இந்த சூழலில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான வசந்த் விகார் காலனியில் உள்ள அலுவலகம் மற்றும் தங்குமிடம் குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வரும் சில பணியாளர்களிடம் இருந்து மாதம் 95 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்றுவிட்ட பிறகு அதன் ஊழியர்கள் அரசுக்கு சொந்தமான இடத்தில் தங்கி இருப்பது நியாயமில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை மட்டுமே அரசு விற்றுள்ள நிலையில் அது தொடர்பான சொத்துகளை விற்கவில்லை என்பதால் அந்த சொத்துகளை விற்று 60 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டவும் அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மிகப்பெரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் மூலம் 2ஆயிரம் பணியாளர்கள் குடும்பத்துடன் தங்கிக்கொள்ள முடியும். பல ஆண்டுகளாக அரசு குடியிருப்புகளில் வசித்து வந்தவர்களை திடீரென வெளியேற்ற சொல்வது குறித்து நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் அங்கு தங்கியிருப்பவர்களை வெளியேற்றும் வகையில் குடியிருப்புகளுக்கு தண்ணீர் வசதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.