எங்களால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சிட்டு இருக்கோம் !!!!!
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டும் என்று அரசு யாரையும் சொல்லவில்லை என்று கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர், மக்களின் நலனுக்காகவே ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், மக்களின் நலனே முக்கியம் என்பதால் இந்த சலுகையை பெற்றதாக விளக்கியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விமர்சித்துள்ளதாக கூறிய வெளியுறுவுத்துறை அமைச்சர், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் நிலையில் இது பற்றி பிரதமர் தான் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார். திமுக எம்பி திருச்சி சிவா, உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது சில மாணவர்கள் மீண்டும் உக்ரைனுக்கே சென்றுள்ளதாகவும், சில மாணவர்கள் மாற்று தீர்வை தேடிக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டே வருவாதகவும் தெரிவித்துள்ளார்.