பங்குகளை நாங்க வாங்கிக்கிறோம்!!! வரிசை கட்டும் நிறுவனங்கள்!!!!!
ஒரு நிறுவனம் தனது வளர்ச்சியை மேம்படுத்த பங்குச்சந்தைகளின் மூலம் நிதியை திரட்டி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு தொகையை மீண்டும் முதலீட்டாளர்களுக்கு அளிப்பது வழக்கம். இந்த சூழலில் நிதி கையாள்வதில் பிரபல நிறுவனமாக திகழும் பஜாஜ் நிறுவனத்தின் கன்சியூமர் பிரிவு அண்மையில் வெளியிட்ட பங்குகளை திரும்பப் பெறுவதற்காக இயக்குநர்களுடன் கலந்து ஆலோசித்தது. சுமார் 81 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்கக் கொள்ள பஜாஜ் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஒரு பங்கின் விலை 240 ரூபாயாக இருக்கும்பட்சத்தில் ஒரு ரூபாய் டிவிடண்ட் அளிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 33 லட்சம் பங்குகளை விற்க பைபேக் வசதியை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்கும் தேவையற்ற வரிக்கு பதிலாக பங்குகளை திரும்ப வாங்கிக்கொள்வது உகந்த முறை என்பதால் பலதரப்பினரும் இதனை அதிகம் நாடி வருகின்றனர். பஜாஜ் கன்சியூமர்ஸ் நிறுவனத்தில் 38%பங்குகள் புரோமோட்டர்களிடமும், அவர்கள் தொடர்புடையவர்களிடமும் உள்ளது, இதேபோல் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் 11.51%பங்குகள் உள்ளன.