நாம ஜெயிச்சிட்டோம் மாறா பாணி சம்பவம்..
ஆகாசா ஏர் நிறுவனம் விரைவில் சர்வதேச விமான சேவையையும் தொடங்க அனுமதி கிடைத்திருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு டிசம்பர் மாதம் ஆகாசா ஏர் விமானம் தனது முதல்சர்வதேச சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதல் கட்டமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குசேவைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாய்,தோஹா ஆகிய நாடுகளுக்கு அடிக்கடி விமானங்களை இயக்கும் வகையில் ஒப்புதலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.வெளிநாடுகளுக்கு வெகுசில விமானங்களே இயக்கப்படும் நிலையில் ஆகாசா ஏர் விமானங்களுக்கு ஒப்புதல் கிடைத்ததாக வெளியாகியுள்ள தகவல் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கும்,அந்நிறுவனத்தினருக்கும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டில் ஒரு நிறுவனம் 5 ஆண்டுகள் விமானங்களை இயக்கியிருந்தால்தான் அனுமதி கிடைக்கும் என்ற சூழல் கடந்த 2016ஆம் ஆண்டு புதிய விதிகளின்படி தளர்த்தப்பட்டது.இப்போது வரை ஆகாசா ஏர் விமானங்கள்,இந்தியாவின் 16 இடங்களில் 900 விமான சேவைகளை வழங்கி வருகிறது. மொத்தம் 20 போயிங் 737 ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.இது தவிர போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட அதிக விமானங்களை ஆகாசா ஏர் நிறுவனம் சந்தையில் களமிறக்க இருக்கிறது.