தேவைப்பட்டா இன்னும் கூட வரி ஏத்துவோம்: ஃபெட் தலைவர்…
நம்மூரில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை ஆளும்கட்சி செய்து வரும் இதே பாணியில் அமெரிக்காவிலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு போராடி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்ட பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவெல் அண்மையில் செய்தியாளர்களிடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அமெரிக்காவில் பணவீக்கத்தின் விகிதம் 2%ஆக குறையும் வரை தேவைப்பட்டால் மத்திய அரசு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவோம் என்றார். எதிர்பார்த்த அளவைவிட பணவீக்கம் குறைந்துள்ளதாக கூறியுள்ள அவர் ஆனால் தற்போதுள்ள விலைவாசி உயர்வே அதிகம் என்றும் தெரிவித்தார். கடுமையான நிதி கொள்கையால்தான் தற்போது விலைவாசி கட்டுக்குள் வந்துள்ளதாக பாராட்டியுள்ள ஜெரோம் பாவல்,வரும் செப்டம்பர் மாதம் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் நிறுத்தி வைக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். முதலீட்டாளர்கள் வரி விதிப்பை அதிகப்படுத்தவே விரும்புவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவே பாவெல் இந்த வகை நடவடிக்கைகளை எடுப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் வழங்கி வரும் கடனின் விகிதம் 5.55%ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 2.4%ஆக உயர்ந்துள்ளது என்றார். விலைவாசி உயர்வை 2%ஆக குறைக்க என்ன நடவடிக்கைகள் தேவையோ அதை செய்வதாக மற்ற ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.