Russia கச்சா எண்ணெய்க்கு No – Shell நிறுவனம் அதிரடி..!!
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்க மாட்டோம் என பன்னாட்டு நிறுவனமான Shell அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வரும் உலக நாடுகள் பலவும், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன.
இந்நிலையில், பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவுடனான தங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த உள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
ரஷ்ய நாட்டிலிருந்து கடந்த வாரம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும், மிக விரைவில் ரஷ்யாவில் செயல்பட்டு வரும் ஷெல் நிறுவனத்தின், பெட்ரோல் பங்க்குகள், விமான எரிபொருள் மற்றும் லுப்ரிகண்ட் சார்ந்த இயக்கங்களையும் நிறுத்த உள்ளதாக ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவிலிருந்து பெட்ரோலிய எரிவாயு பொருட்கள் மற்றும் LNG உள்ளிட்டவற்றை வாங்குவதை படிப்படியாக குறைத்து கொள்ள இருப்பதாகவும் ஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.