பால் விலையை அதிகரிக்க மாட்டோம்!!!

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆனந்த் மில்க் யூனியன் லிமிட்டடான அமுல் இந்திய அளவில் மிகவும் பிரபலமானதாகும். குண்டான குழந்தையாக இருந்தால் அதனை அமுல் பேபி என்று கூட கொஞ்சும் அளவுக்கு அமுல் நிறுவனம் பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமானதாகும். அமுல் பால்தயாரிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் குஜாரத்தைச் சேர்ந்தகூட்டுறவு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கமான GCMMF நிறுவனம் 2022-23 நிதியாண்டில் மட்டும் 55 ஆயிரத்து 55 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதுஇது கடந்தாண்டைவிட 18.5 விழுக்காடு அதிகமாகும். கொரோனாவுக்கு பிறகு நல்ல பாலின் தேவை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள அமுல் நிறுவன அதிகாரிகள், அமுல் நிறுவன பாலின் விலையை தற்போது உயர்த்தும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். பால் உற்பத்தியாளர்களுக்கு நல்ல பணம் கிடைப்பதால் உற்பத்தி அதிகமாகியுள்ளதாக கூறியுள்ள அந்த கூட்டுறவு நிறுவனத்தின் நிர்வாகிகள்,ஒரு நாளைக்கு 470 லட்சம் லிட்டர் பால் புழக்கத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். வெயில் காலமும் துவங்கிவிட்டதால் ஐஸ்கிரீமின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக அதுவும் 41 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அமுல் நிறுவனம் தெரிவிக்கிறது. அமுல் நிறுவனத்தின் அனைத்து வகை பொருட்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் விற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளதாக அமுல் நிரவாகி மேத்தா தெரிவிக்கிறார். இதன் காரணமாக அடுத்தாண்டு 66ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.