விமான தொழிலில் இருந்து விலக மாட்டோம்!!!!
கோ ஃபர்ஸ்ட் என்ற நிறுவனம் கடும் நிதி நெருக்கடியால் திவால் நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த நிறுவனம் எழுப்பிய புகார் தொடர்பாக மத்திய அரசு உதவ முன் வந்திருக்கிறது. இந்த நிலையில் கோஃபர்ஸ்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான வாடியா குழுமத்தின் தலைவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டி அளித்துள்ளார். அதில் விமான நிறுவனம் திவாலாகும் சூழல்தான் உள்ளதே தவிர்த்து தங்கள் நிறுவனம் இந்த தொழிலை விட்டு விலகப்போவதில்லை என்று கூறியுள்ளார். இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான பிராட் அண்ட் விட்னி நிறுவனத்துக்கு எவ்வளவு பணம் தர வேண்டுமோ அத்தனையும் தர தயாராக இருப்பதாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் சிஇஓ Kaushik Khona தெரிவித்துள்ளார். எந்த வங்கிக்கும் கடன் பாக்கி கூட வைக்காத இந்த நிறுவனம், திடீரென திவாலாகும் சூழல் ஏற்பட்டது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென கோஃபர்ஸ்ட் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியுள்ளதால் அதன் போட்டி நிறுவனங்களான இண்டிகோவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கோஃப்ர்ஸ்ட் நிறுவனம் திடீரென திவால் நோட்டீஸ் கொடுதத்தும் அந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ், பாங்க் ஆஃப் பரோடா, ஐடிபிஐ ஆகிய வங்கிகளின் பங்குகள் கணிசமாக சரிந்தன. 65.21 பில்லியன் ரூபாய் கடன்காரர்களுக்கு தரவேண்டும் என்றும் அந்த நிறுவனம் தனது திவால் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது. கோஃபர்ஸ்ட் நிறுவனத்தின் திடீர் சறுக்கல் காரணமாக வாடியா குழுமத்தின் பிற நிறுவன பங்குகள் சுமார் 5 விழுக்காடு வரை சரிந்துள்ளன.