தனியார் ஜெட் விமானங்களை நாடும் பயணிகள்
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்களை பணியாளர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு சவால்களால் விமான நிறுவனங்கள் ரத்து செய்ததால் பயண தேவையை கையாள, பயணிகள் தனியார் ஜெட் விமானங்களை நாடுகின்றனர்.
ஜூலை மாதத்தில் சராசரியாக தனியார் ஜெட் சார்ட்டர் செயலியான Jettly மூலம் கிட்டத்தட்ட 34,000 விமானப் பயணங்கள் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏழு ஆண்டுகளில், 2020 ஆண்டைத் தவிர 2022 இல் தாமதமான விமானங்கள் அதிக சதவீதமும் (19%) மற்றும் ரத்து செய்யப்பட்ட விமானங்கள் அதிகபட்ச சதவீதமாகவும் (4%) உள்ளன.
பொதுவாக ஒரு மணி நேர விமான பயணத்திற்கு $3,000 இல் இருந்து தனியார் ஜெட்கள் வாடகையாக பெற்றுக்கொள்கின்றன.
மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் விமானத்தை முன்பதிவு செய்த பயணிகளில் 63% பேர் ஓய்வு நேரப் பணிகளுக்காக பயணம் செய்தனர், மற்ற 37% பேர் வணிகத்திற்காக பறந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.