என்னது!!!! 18000 பேரா ???
உலகம் முழுவதும் அறியப்பட்ட மின்வணிக நிறுவனமாக அமேசான் திகழ்கிறது. அமெரிக்காவில் நிலவும் வலுவற்ற பொருளாதார சூழலில் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டது. முதலில் சில ஆயிரங்களாக இருந்த பணி நீக்க எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த நிலையில் புதிதாக பணிநீக்கம் செய்ய உள்ள எண்ணிக்கையை அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆண்டிஜாசி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி புதிதாக மொத்தம் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி முதல் பணிநீக்கம் அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார். மொத்தமுள்ள 3 லட்சம் அலுவலக பணியாளர்களில் 6 விழுக்காடு பணியாளர்களை அமேசான் நீக்க உள்ளது. கணக்கு வழக்கு இல்லாமல் பல ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்ததை சுட்டிக்காட்டியுள்ள ஆண்டி, தங்கள் நாட்டு பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்காவிலேயே அதிகம் பேருக்கு வேலை கொடுத்துள்ள நிறுவனங்களில் வால்மார்ட் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. 15 லட்சம் மறைமுக பணியாளர்களுடன் அமேசான் நிறுவனம் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் பெரிய நிறுவனங்களான பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வரும் சூழலில் உலகில் பரவலாக அறியப்பட்டுள்ள அமேசான் நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியது பலரையும் அதிரவைத்துள்ளது.