என்னா நெட்வொர்க் வச்சிருக்கீகளோ..கொஞ்சம் மாத்துங்கப்பா…!!
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், செல்போன் சிம்கார்டு சேவை அளித்து வரும் நிறுவனங்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. இதில் தற்போதுள்ள கட்டமைப்பை வலுப்படுத்தி தரமான சேவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. நாட்டில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட தற்போதுள்ள கட்டமைப்பு மிகமிக இன்றியமையாதது என்றும் டிராய் கூறியுள்ளது. இது சம்பந்தமாக டிராய் அதிகாரிகளும் செல்போன் சிம்கார்டு நிறுவனங்களும் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர்முனையில் இருப்போருக்கு மியூட் ஆகும் குறைபாடுகளை களைய வேண்டும் என்றும் டிராய் அறிவுறுத்தியுள்ளது. volte சேவையில் கால் மியூட்டிங் பிரச்னை அதிகரித்துள்ளதாகவும் நிறுவனங்களை டிராய் சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளது. தேவையற்ற டெலி மார்க்கெட்டிங் அழைப்புகள் தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 5ஜி சேவையை அமல்படுத்தும் நிலையில் தரத்தை கண்காணிக்க 24 மணிநேரமும் கண்காணிப்பு அமைப்பு அமைக்க வேண்டும் என்றும் டிராய் எச்சரித்தது.இதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லர்னிங்கை பயன்படுத்தவும் டிராய் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.