பாக்ஸ்கான் டீல் என்னாச்சி…
தைவானைச் சேர்ந்த பிரபல நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவின் செமி கண்டக்டர் உற்பத்தி திட்டத்துக்கான ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளது வேதாந்தா குழுமத்துடன் இணைந்து 19.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள செமிகண்டக்டர் உற்பத்தி திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது வேதாந்தா நிறுவனம் வெளியேறியதை அடுத்து தாங்களே நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கும் பணிகளை பாக்ஸ்கான் நிறுவனம் முன்னெடுத்துள்ளது
வேதாந்தாவும் பாக்ஸ்கானும் இணைந்து தயாரிக்கும் செமிகண்டக்டர்கள் இந்தியாவில் மிகமுக்கியமானது என்று கடந்தாண்டு பிரதமர் மோடி சுட்டிக்காட்டி பேசியிருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த ஆலை செயல்படும் முன்பே வணிக முறிவு ஏற்பட்டுள்ளது வேதாந்தாவுக்கு பதிலாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் சிலருடன் பாக்ஸ்கான் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.2026ஆம் ஆண்டில் இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை என்பது 63 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. செமிகண்டக்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத் தொகைக்கு வேதாந்தா-பாக்ஸ்கான் இணைந்து கூட்டு நிறுவனம்,சிங்கப்பூரைச் சேர்ந்த ஐஜிஎஸ்எஸ் மற்றும் குளோபல் கன்சோர்டியமான ஐஎஸ் எம்சி ஆகிய 3 நிறுவனங்கள் மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்
இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அடுத்தடுத்து சிக்கலில் சிக்குவதால், அத்தனை பெரிய வணிக இலக்கை எட்டமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பிரிவை சாதகமாகவே பார்ப்பதாக பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்தியாவில் பிரபலமாக உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு கடன் அதிகரித்துள்ளதே பிரிவுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.