அது என்ன ஏஞ்சல் வரி?
இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தொடங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்தோருக்கு புதிய விதிகளை வருமான வரித்துறை வகுத்துள்ளது. 11UA விதி கடந்த 25ஆம் தேதி முதல் அமலாகியுள்ளது.மத்திய நேரடி வரிகள் வாரியமான CBDT, கட்டாயம் மாற்றத்தக்க பங்குகளான CCPS ரக பங்குகளுக்கு புதிய விதிகளை விதித்துள்ளது. புதிய விதிகளானது 5 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விதிகள் இந்தியாவில் இல்லாத வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக வகுக்கப்பட்டுள்ளது. 5 வகையான புதிய விதிகள் வரிசெலுத்துவோருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் வரி செலுத்தும் முறையை ஒழுங்குபடுத்தியுள்ளது.கடந்த மேமாதமே ஸ்டார்ட் அப் முதலீடுகள் குறித்து அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் விதித்திருந்தது தற்போது அதுகுறித்து மக்களின் கருத்துகள் பெறப்பட்டு வந்தது. சந்தை மதிப்புக்கு அதிகம்உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரியே ஏஞ்சல் டாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்தாண்டு மாற்றப்பட்ட புதிய நிதிச்சட்டத்தின்படி முதலீடுகள் செய்பவர் இந்தியாவில் இருந்தாலும் வெளிநாட்டினராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு முன்பு முறையான சந்தை மதிப்பை மதிப்பிட 2 விதிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இது 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.