என்னங்க சொல்றீங்க நம்ம பயலுகளா இப்படி பண்ணிட்டாங்க…
300 மில்லியன் அமெரிக்க டாலர்களை திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் இருந்து இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 24 மணி நேரத்துக்குள் இந்த தொகை திரும்ப எடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் நிதிகளை அமெரிக்காவில் சேமித்து அங்கிருந்து படிப்படியாக பணிகளை செய்து வரும் நிலையில்,நிறுவனங்களின் பணம் திடீரென எடுக்கப்பட்டுள்ளது. வெறும் 24 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்தபடிஅமெரிக்க வங்கிகளில் கணக்குகளை தொடங்கிவிடமுடியும் என்று கூறியுள்ள நிபுணர்கள், அமெரிக்க பாதுகாப்பு எண்களை வைத்திருக்கும் நபர்களின் உதவியால் இது சாத்தியம்தான் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தியாவில் இருந்து ஒருவர் பாதுகாப்பு எண் இல்லாதபட்சத்தில் கணக்கு துவங்க 5 நாட்கள் வரை ஆகலாம். இந்த நிலையில் அமெரிக்காவில் பாதுகாப்பு எண் வைத்திருந்து அவர்கள் செலுத்தியிருந்த 300மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு திரும்பப்பெறப்பட்டுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி திவாலானாலும் அதில் இருந்து பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்ற போதிய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நேரடியாக சிலிக்கான் வேலி வங்கியிடம் இருந்து பணத்தை எடுக்காமல் பிரிட்ஜ் பேங்க் எனப்படும் இடைத்தரகு நிறுவனங்களால் எஸ்விபி வங்கியில் இருந்து பணத்தை அமெரிக்காவில் உள்ள வேறொரு நிறுவன வங்கியில் மாற்றிக்கொள்ள முடிகிறது. தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி முதலீடு செய்த இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு துவக்கமே அதிர்ச்சி ஏற்பட்டதால் இதில் முதலீடு செய்த மற்ற சில நிறுவனங்கள் அடுத்து என்ன செய்வது என்று தடுமாறிப்போய் உள்ளனர்.