பாதிக்கு பாதி அடிவிழுந்தா என்ன செய்ய முடியும்.. பாவம் இந்த நிறுவனங்கள்….
திடீரென ஒருவரை உச்சானி கொம்பில் உட்கார வைப்பதும், திடீரென சறுக்கி தூக்கி வீசுவதும் பங்குச்சந்தைகளில் பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் டாப் 10-ல் 5 நிறுவனங்கள் 86,447.12 கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்போசிஸ், டிசிஎஸ், பாரத ஸ்டேட் வங்கி ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. Reliance Industries Ltd., Tata Consultancy Services Ltd., HDFC Bank, Infosys and State Bank of India ஆகிய 5 நிறுவணனங்களில் ஏற்பட்ட சரிவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும்,ICICI Bank, Hindustan Unilever Ltd., ITC, HDFC மற்றும் Bharti Airtel ஆகிய நிறுவனங்கள் லாபத்தை சந்தித்தன. இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் என்பது 25ஆயிரத்து217.2 கோடி ரூபாய் சரிந்து 5 லட்சத்து 72ஆயிரத்து 687.97 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதேபோல் பாரத ஸ்டேட் வங்கி 21,062 கோடி சரிந்து 4,51,228.38 கோடி ரூபாயாக உள்ளது. டிசிஎஸ் 11,42,154 கோடியாகவும், ரிலையன்ஸ் குழும பங்குகளின் சந்தை முதலீடுகள் 14.90 லடசம் கோடி ரூபாயாகவும் , எச்டிஎப்சி நிறுவன பங்குகளின் சந்தை மூலதனம் 8.71 லட்சம் கோடி ரூபாயாகவும் சரிந்துள்ளன. ஐசிஐசிஐ வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்து 5.94 லட்சம் கோடியாகவும்,Hindustan Unilever நிறுவன மதிப்பும் உயர்ந்து 5.82 லட்சம் கோடிரூபாயாகவும், ITCநிறுவன பங்குகள் 4.70 லட்சம் கோடி ரூபாயாக சந்தைய மூலதனம் உயர்ந்துள்ளது. அடி விழுந்தாலும் மேலே கூறிய மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களே வெளியாட்களை உள்ளே விடாமல் டாப் 10 இடங்களை அலங்கரித்து வருகின்றன.