வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க காரணம் என்ன?
வர்த்தகத்தின் கடைசி நாளில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தனர். வாரத்தின் கடைசி வர்த்தக நாளின் கடைசி நேரத்தில் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றனர்., அக்டோபர் 27ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் 10,860 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் விற்றுள்ளதாகவும் ,9 ஆயிரத்து 360 கோடி ரூபாய் அளவுள்ள பங்குகளில் முதலீடுகள் செய்துள்ளதாகவும் தரவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடுகளை விற்றுள்ளனர். நடப்பாண்டில் ஜனவரிக்கு பிறகு விற்கப்பட்ட அதிகபட்ச முதலீடுகள் அக்டோபரில் தான் பதிவாகியுள்ளன.
கடந்த ஜனவரியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 41,464கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை விற்றனர்.இவ்வளவு பணத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்ய என்ன காரணங்கள் என்பதை பார்க்கலாம். இதற்கு முக்கிய காரணியாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் திகழ்கிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் ஒரு பேரல் 100 டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளது. அமெரிக்க பாண்ட் வருவாய் கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு 5 விழுக்காடு என்ற அளவை எட்டியுள்ளது.
அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு நிலைமை சிக்கலாகியுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து முதலீடுகளை எடுத்துச்செல்லும் முதலீட்டாளர்கள் அமெரிக்காவிலேயே அதிக முதலீடுகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்க சந்தைகள்,அமெரிக்க பாண்டுகளில் அதிக முதலீடுகள் செய்வது சிறந்தவை என்று முதலீட்டாளர்கள் கருதுவதும் இந்திய சந்தைகள் வீழ்ச்சியடைய முக்கிய காரணமாக கூறப்படுகிறது.