கச்சா எண்ணெய் விலை மாற காரணம் என்ன?
கச்சா எண்ணெயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மற்றும் அதன் தோழமை நாடுகளின் அமைப்பை ஓபெக் பிளஸ் நாடுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஓபெக் பிளஸ் நாடுகள் அண்மையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்திருந்தன. இதனால் விலை வீழ்ச்சி தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஜுன் 2 ஆம் தேதி ஓபெக் பிளஸ் நாடுகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டன. அதில் சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 80 டாலர்களுக்கும் குறைவாக விற்க முடிவெடுக்கப்பட்டது. சவுதி அரேபியாதான் இந்த உற்பத்தியை ஒரு நாளுக்கு 22 லட்சம் பேரல் கச்சா எண்ணெயாக குறைத்ததும், செப்டம்பர் மாதம் வரை உற்பத்தி குறைப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நிலைமை சற்று சரியில்லாததால் செப்படம்பருக்கு பிறகு உற்பத்தி குறைப்பு விலக்கிக்கொள்ளப்பட இருப்பதாகவும் அதாவது 2025 செப்டம்பர் வரை படிப்படியாக உற்பத்தி குறைப்பு நிறுத்தப்படும் என்றும் சவுதி திட்டமிட்டுள்ளது. இப்போது வரை ஓபெக் பிளஸ் நாடுகள் ஒரு நாளைக்கு 60லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளன. 36லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மட்டுமே தினசரி வரும் 2024 முடிவு வரை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை ஜூன் 3 ஆம் தேதி நிலவரப்படி 3 டாலர் விலை குறைந்து, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 78 டாலராக இருந்தது. இது கடந்த பிப்ரவரிக்கு பிறகு மிக்ககுறைந்த விலையாகும். கடந்த சில வாரங்களில் 80 முதல் 82 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது சரிந்துள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த ஏப்ரலில் 90 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது சரிந்துள்ளது. ஓபெக் நாடுகளின் உற்பத்தி குறைப்பு முடிவால் இந்தியாவில் பெரிய பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் பயன்பாடு 85 விழுக்காடு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை நம்பியே இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது அது இந்திய கச்சா எண்ணெய் விற்பனை நிறுவனங்களை நேரடியாக பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது எந்த பெரிய பாதிப்பும் இல்லை என்பதே நிதர்சனம்.