இளைஞர்கள் அழுத்தத்துக்கு காரணம் என்ன?
இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களுக்கும் மன அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும், கடந்த 10 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இந்த பிரச்சனை மேலும் வளர்ந்திருப்பதாகவும் எடல்வெயிஸ் பரஸ்பர நிதியின் தலைவரான ராதிகா குப்தா தெரிவித்துள்ளார். இதற்கு பல காரணிகள் இருப்பதாகவும் அவர் பட்டியலிட்டு உள்ளார். இதற்கு முக்கிய காரணம் அடுத்தவர்களின் வாழ்க்கையுடன் தங்கள் வாழ்க்கையை ஒப்பிடுவதும், தங்கள் வாழ்க்கையை கவனிக்க மறந்துவிடுவதும்தான் என்று கூறியுள்ளார். தனித்துவமாக இருப்பதைவிட்டுவிட்டு இன்ஸ்டாகிராமில் வாழ்ந்து வருவதாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வெவ்வேறு தலைமுறையினர் வெவ்வேறு காலகட்டத்தில் பல மனநிலைகளை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.நடிகர் நவாசுதின் சித்திக் கடந்தாண்டு இது பற்றி பேசியதை ராதிகா குப்தா குறிப்பிட்டார்.. அண்மையில் மன அழுத்தம் பற்றி நவாசுதின் சித்திக் கிராமத்துக்கு குடி பெயர்ந்ததையும், கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மன அழுத்தம் குறைந்திருப்பதையும் சித்திக் குறிப்பிட்டார்.