பைடனும்-கெவினும் அப்படி என்னதான் பேசினாங்க..???
அமெரிக்க கடன் உச்சவரம்பு தொடர்பாக நாம் துவக்கத்தில் இருந்து மிகத்துல்லியமான தகவல்களை அளித்து வருகிறோம்.இந்த வரிசையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் எதிர்க்கட்சித் தலைவர் கெவின் மெக்கார்த்தியும் கடன் உச்சவரம்பை உயர்த்துவது குறித்து ஒரு வழியாக இறுதி முடிவுக்கு வந்துள்ளனர். அமெரிக்க கடன் உச்சவரம்பை உயர்த்துவது குறித்து இதுவரை என்னவெல்லாம் பேசினார்கள் என்பதை கீழே பார்க்கலாம். சமாதானப்படுத்தும் முயற்சி என்று கடன் உச்சவரம்பு உயர்த்துவதை ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதே நேரம் அமெரிக்க மக்களுக்காக கடன் உச்சவரம்பை உயர்த்த இசைவு தெரிவிப்பதாக கெவின் தெரிவித்துள்ளார். சில நிபந்தனைகளை இருதரப்பும் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 99 பக்க அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 31.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற கடன் உச்சவரம்பு அடுத்த 2 ஆண்டுகளுக்கு மட்டும் உயர்த்த மட்டும்தான் இசைவு கிடைத்திருக்கிறது. புதிய ஒப்புதலின்படி, பாதுகாப்புத்துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் முதலீடுகளையும்,தேவையில்லாத செலவுகளையும் குறைக்க எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். கொரோனா காலகட்டத்தில் செலவு செய்யப்படாத பணத்தை பிற செயல்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். குழந்தை இல்லாத தம்பதிக்கு சிறப்பு சலுகைகளை அளிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த சிறப்பு சலுகைகளில் வேறு யாரையெல்லாம் சேர்க்கலாம் என்பது பற்றி விசாரிக்கவும் எதிர்க்கட்சியினர் ஆளும் பைடன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.