90ஸ் கிட்ஸ்னா சும்மாவா? …
90ஸ் கிட்ஸ்க்கு பொறுப்பே இல்லை என்று வீடுகளில்தான் அம்மாக்கள் திட்டுகின்றனர். நிஜத்தில் அதில் எந்த உண்மையும் இல்லை என்கிறது புள்ளி விவரம். 1981 முதல் 1996ம் ஆண்டு வரை பிறந்தவர்களை மில்லினியல்ஸ் என்பார்கள். இவர்கள் எந்தளவுக்கு விவரமானவர்கள் என்று அண்மையில் CAMS நிறுவன அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. ஏன் இத்தனை பில்டப் என்று நீங்கள் கேட்கலாம், இது நிஜம் தான் பில்டப் இல்லை. கேம்ஸ் நிறுவன அறிக்கையின்படி பரஸ்பர நிதி முதலீட்டில் 54%பேர் இந்த 90ஸ் கிட்ஸ்தான் உள்ளனர். இந்த அளவு என்பது, 1 கோடியே 60 முதலீட்டாளர்கள் ஆகும். 2019-23 காலகட்டத்தில் மட்டும் 85 லட்சம் பேர் புதிதாக பரஸ்பர நிதியில் பங்களிப்பை செய்துள்ளனர். 2023 மார்ச் மாத நிலவரப்படி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 96 ஆயிரம் கோடி ரூபாய் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. துறைசார்ந்த பரஸ்பர நிதியில்தான் அத்தனை பணமும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. திடீரென 90 கிட்ஸ் மற்றும் மில்லியனல்ஸ்க்கு எப்படி இத்தனை ஞானம்பிறந்தது என்று கேட்போருக்கும் பதில் இருக்கிறது. அவர்களாக வெறும் 5விழுக்காடு பேர் மட்டும்தான் பரஸ்பர நிதியை பற்றி புரிந்து முதலீடு செய்திருக்கின்றனர். மற்ற 95விழுக்காடு ஒரு ஆலோசகர் இவர்களின் பின்னணியில் இருப்பதாகவும் காம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.இதில் 35 விழுக்காடு செபியால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர்கள்,மீதம் உள்ளவர்கள் வங்கிகள் மற்றும் பரஸ்பர நிதி விநியோகஸ்தர்களின் ஆலோசனைகளை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதில் பெரும்பாலானவர்களின் தேர்வு சிப் எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானாகத்தான் இருக்கிறது. 57% மில்லினியல்ஸ் வெறும் ஒரே ஒரு பரஸ்பர நிதியை தேர்வு செய்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரம்.