பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது என்ன..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2023-24 நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்தியாவின் நிதித்துறை பிரகாசமாக இருப்பதாகவும், சில இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். முதலீட்டு சந்தை அதிகரித்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமனஅ தெரிவித்தார். பிரதமராக நரேந்திர மோடி 3 ஆவது முறையாக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்தியாவின் ஜிபிடி வரும் நிதியாண்டில் 6.5 முதல் 7 விழுக்காடு வரை உயரும் என்று தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் 8.2விழுக்காடு அளவுக்கு பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் நிதி நிலை, வருங்கால திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்த ஆய்வறிக்கையில் தகவல் இடம்பெறும். கொரோனா காலகட்டத்தில் இருந்த சிக்கல்கள் தற்போது மெல்ல மெல்ல தீர்ந்து வருவதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.