பட்ஜெட் பற்றி மோடி என்ன சொல்கிறார்
2023 நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள நிலையில் இதுபற்றி பிரதமர் மோடி பேசியுள்ளார். அதில் இந்தியாவின் வளர்ச்சிக்காக இந்த பட்ஜெட் உதவும் என்று தெரிவித்துள்ளார்
நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் என்று தெரிவித்துள்ளார்
விவசாயிகளும்,ஏழை மக்களும் இந்த பட்ஜெட்டால் பயனடைவர் என்று கூறியுள்ள பிரதமர் மோடி,பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயரவும் இந்த பட்ஜெட் உதவும் என்று தெரிவித்துள்ளார்
நடப்பாண்டு பட்ஜெட்டில் விவசாய டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது இருந்தது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பசுமை வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்
ஏழை மக்களின் வரிச்சுமையை குறைத்து வரி செலுத்தும் முறையை எளிமையாக்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்