அதானி குழுமம் பற்றி என்ன சொல்கிறார் அம்மையார்!!!
அதானி குழுமத்தின் சொத்துகளில் பெரும்பகுதி இழக்கும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில் இந்த விவகாரத்தில் சிலர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகிய அமைப்புகள் மிகவும் திறமைசாலிகள் என்றும் அவர்கள் அதானி குழும விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் தர உள்ளது.
அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளதால் பொதுமக்களின் பணம் வீணாகிறதா என்ற பொதுநல மனுவிற்குத்தான் நிதியமைச்சர் பதில் தருகிறார். பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு, முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை உள்ளது என்று கேட்டுள்ளது
இதனை நிதியமைச்சர், செபி ஆகியோர் பதில்தரவும் கோரப்பட்டது. இந்த நிலையில் இது பற்றி செபி அமைப்பு விசாரணை நடத்தி வருவதாகவும் நிதியமைச்சர் சொல்லியுள்ளார்.