காக்னிசண்ட்டில் நடப்பது என்ன?
பிரபல மென்பொருள் நிறுவனமான விப்ரோவில் மூத்த நிதி அதிகாரியாக ஜதின் டலால் என்பவர் பணியாற்றி வந்தார். அவருக்கும் நிர்வாகத்துக்கும் இடையே அண்மையில் கருத்து வேறுபாடு நிலவியதால் அவர் வெளியேறிவிட்டார். இந்த நிலையில் சட்டப்போராட்டம் மற்றும் செட்டில்மன்ட்டாக 4.2 கோடி ரூபாயை டலாலுக்கு தர காக்னிசண்ட் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதேபாணியில் அண்மையில் தலைமை செயல் அதிகாரி ஒருவரையும் விப்ரோ மோசமாக நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. டலாலுக்கு 4.2 கோடி ரூபாய் பணம் அளிப்பதால் இதேபோல் விப்ரோவில் இருந்து வெளியேறிய 6 பேர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது விப்ரோவில் இருந்து டலாலை காக்னிசண்ட்டுக்கு வேலைக்கு எடுப்பதால் ஏற்படும் இழப்புக்கு காக்னிசன்ட் நிறுவனம் பணம் தருகிறது என்பதே இதன் பொருளாகும். கடந்தாண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி டலால் பதவி விலகுவதாக அறிவித்தார். அதில் இருந்து ஒரு வாரத்தில் அவர் காக்னிசண்ட்டில் தலைமை நிதி அதிகாரியாக அறிவிக்கப்பட்டார். தங்கள் விதிகளை டலால் பின்பற்றவில்லை என்று விப்ரோ நிறுவனம் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இழப்பீடாக டலால் 25.1 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் அதில் கோரப்பட்டது. போட்டி நிறுவனத்தில் சேர்ந்ததால் இந்த வழக்கை விப்ரோ நிறுவனம் டலால் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. டலாலுக்கு ஆதரவாக காக்னிசண்ட் நிதியுதவி அளிப்பது மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.