இன்போசிஸ்,விப்ரோவில் நடப்பது என்ன?
இந்தியாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் டெக் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக முன்னணி ஐடி நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் விப்ரோவில் இது கடந்த 2 நிதியாண்டுகளாக கணிசமாக குறைந்துவிட்டது. தொழில்நுட்ப ரீதியில் நிலவும் மந்த நிலையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பெருந்தொற்று முடிந்த பிறகு பல டெக் நிறுவனங்களும் டெக் பணியாளர்களை தேடித் திரிந்தனர். குறிப்பாக இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் எச்சிஎல் டெக் நிறுவனங்களில் பல லட்சங்களில் சம்பளத்தை அள்ளிக்கொடுத்து அவர்களை தக்க வைத்தனர்.ஆனால் உலகளவில் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் மட்டும் 16 விழுக்காடு கோடீஸ்வர பணியாளர்கள் குறைந்துள்ளனர். 2022 நிதியாண்டில் 122 ஆக இருந்த கோடிகளில் சம்பளம் வாங்கும் பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது 103 ஆக குறைந்துள்ளது. விப்ரோவிலும் 12 விழுக்காடு சரிவு காணப்படுகிறது. 2022-ல் 92 பேர் கோடிகளில் சம்பளம் பெற்ற நிலையில் 2024 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 81 ஆக சரிந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் 2024 நிதியாண்டில் கோடிகளில் சம்பளம் வாங்கும் பணியாளர்கள் 12 பேர் இணைந்துள்ளனர். அதே நேரம் விப்ரோவில் 8 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர், இந்தியாவில் தலைமைப்பன்பு உள்ள ஏராளமான ஊழியர்கள் இருக்கும் நிலையில் புதிய தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் அதற்கும் சற்று குறைவான பதவிகளில் இருப்பவர்களுக்கு தேவை ஏற்படவில்லை. இந்தியாவில் முன்னணியில் உள்ள 6 டெக் நிறுவனங்களில் மட்டும் 75 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் பணியில் இருந்து சென்றுள்ளனர். 2024 நிதியாண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து மட்டும் 13,249 பேர் வெளியே சென்றுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் இன்போசிஸில் இருந்து 25,994 பேரும், விப்ரோவில் இருந்து 24,516 பேரும் தங்கள் வேலைகளைவிட்டு வெளியே சென்றுள்ளனர். அதே நேரம் எச்சிஎல் டெக் நிறுவனம் மட்டும் புதிதாக 1,537 பணியாளர்களை புதிதாக சேர்த்துள்ளனர்.