ஆடிய ஆட்டம் என்ன…டமால்னு விழுந்த தங்கம் விலை!!!
அமெரிக்காவில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்ததன் விலைவாக இந்தியாவிலும் தங்கம் விலை குறிப்பிடத்தகுந்த ஏற்றம் கண்டது. இந்த நிலையில் அமெரிக்காவில் டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் தங்கத்தின் மீதான மதிப்பு சரிந்துள்ளது. இதன் விளைவாக இந்திய சந்தைகளிலும் தங்கம் விலை சரிந்துள்ளது. கொஞ்ச நஞ்சமல்ல, 800 ரூபாய் ஒரு சவரனுக்கு சரிந்து 43ஆயிரத்து 760 ரூபாய்க்கு தங்கம் விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5ஆயிரத்து 470 ரூபாயாக உள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 74 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு 700 ரூபாய் விலை குறைந்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் மார்ச் 22ம் தேதி மிதமான ஏற்றத்தை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்ந்து 58ஆயிரத்து 214 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 44 புள்ளிகள் ஏற்றம் பெற்றன. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 17ஆயிரத்து 151 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றன. HDFC Life Insurance, Bajaj Finance, Bajaj Finserv, Sun Pharma, Tata Consumer Product உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை சந்தித்தன.BPCL, Coal India, NTPC, Adani Ports,Axis Bank. ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது முடிவுகளை தெரிவிக்கும் என்பதால் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது.