சீனாவில் விலைவாசி நிலவரம் என்ன?
சீனாவில் கொரோனா மற்றும் அதனை சார்ந்த கட்டுப்பாடுகளால் அந்நாட்டு பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. மெல்ல இப்போதுதான் அந்நாட்டு பொருளாதாரம் மீண்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு வாடிக்கையாளர் பண குறியீடு 0.1%உயர்ந்திருக்கிறது. நம்மூர்களில் விலைவாசி உயர்வு ஏற்படுவது போல் அந்நாட்டில் உள்நாட்டில் உணவுப்பொருட்கள் விலை கடும் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. உணவுப்பொருட்கள் விலை வீழ்ந்து வரும் இதே நிலையில் உணவு இல்லாத மற்ற பொருட்களின் விலை 0.5%அதிகரித்துள்ளது. சீனாவில் அண்மையில் கொட்டிய கனமழையால் அரிசி மற்றும் சோளப்பயிர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில் சீனாவிலும் போதிய உற்பத்தி இல்லாததால் உலகளவில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் பன்றிக்கறி விலை மாதந்தோறும் 11.4%விலையேற்றம் கண்டுள்ளது. சீனாவில் ஆகஸ்ட் மாதம் ஏற்றுமதி,இறக்குமதி சமநிலையை எட்டியுள்ளது.வீழ்ந்து கிடக்கும் உணவுப்பொருட்கள் விலையை உயர்த்த போதுமான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. கடன்கள் மீதான வட்டி விகிதத்தை சீன வங்கி குறைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
2023ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சி 5%ஆக இருக்கும் என்று அந்நாட்டு பிரதமர் லி குயாங் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லாததால், இந்த அளவை சீனா எட்டுவது சாத்தியம் இல்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.