மின்சார வாகனங்களுக்குத் தடையா உண்மை நிலவரம் என்ன?
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உள்ளது. இந்த நிலையில் மின்சார வாகனங்களை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் முழுமையாக இத்தகைய வாகனங்களை தடை செய்யவில்லை என்றும், அந்நாட்டில் நிலவும் மின்சார உற்பத்தி பற்றாக்குறையை சமாளிக்க தற்காலிகமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைக்கவும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது தற்போது அந்த நாட்டில் உள்ள பொருளாதாரம் மற்றும் மின்சார சிக்கல்களை சரி செய்யும் நோக்கில் 4 கட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 3ம் கட்ட திட்டத்தில்தான் மின்சார வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு தேவையான மின்சார உற்பத்தி பனிப்பொழிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்யவே பகுதி அளவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளதாகவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கும் நோக்கிலேயே இதை செய்துள்ளதாகவும் விளக்கப்பட்டுள்ளது அந்தநாட்டில் 60 % நீர் மின் உற்பத்தி மட்டுமே உள்ளதாக கூறும் அதிகாரிகள், பனிக்காலம் என்பதால் மின்சார உற்பத்தி தடைபட்டுள்ளதாகவும்,வெளிநாடுகளிடம் இருந்து மின்சாரம் கடன் வாங்கக்கூடாது. என்பதற்காகவே இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேவை ஏற்பட்டால் கடைகளை இரண்டு மணி நேரம் அடைக்கவும், வீடுகளில் வாஷிங் மிஷின் பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு திட்டமிட்டு இருக்கிறது.
கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை போல யாரையும் பாதிக்காமல் புதிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று அந்நாட்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.