ஆப்பிள் நிறுவன பங்குகள் சரிய காரணம் என்ன?
ஆப்பிள் நிறுவனத்தின் 15 ஆவது ரக ஐபோன்கள் நாளை உலகம் முழுவதும் விற்பனைக்கு வர உள்ளன.இந்நிலையில் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை கடுமையாக சரிந்திருக்கின்றன. இதற்கு பிரதான காரணமாக சீனாவில் ஐபோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதே என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.சீனாவில் Huwaweiநிறுவனம் புதிய மேட் 60 என்ற செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் ஐபோன்களை வாங்குவதற்கு பெரிய ஆர்வம் இல்லாததன் காரணமாக கிட்டத்தட்ட ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 6%வரை சரிந்தன.இதன் காரணமாக சந்தையில் 200பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிவு ஏற்பட்டுள்ளது. ஐபோன்களின் முந்தய வெர்ஷன்கள் அறிமுகத்தின்போது ஐபோன் நிறுவன பங்குகள் கணிசமாக உயர்ந்து வந்திருந்த சூழலில் 12ஆம் தேதிக்கு முன்னதாக இந்த விலை சரிந்திருப்பது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. ஐபோனுக்கு போட்டியாக சீன ஹுவாவே நிறுவனம் மேட் 60 என்ற செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கிரின் 9000எஸ் என்ற சிப் உள்ளது. இது முழுக்க முழுக்க சீனாவிலேயே உற்பத்தியானது. அமெரிக்கா-சீனா இடையே பல ஆண்டுகளாக போட்டி நிலவும் சூழலில் சீனாவின் 5ஜி வளர்ச்சிக்கு அமெரிக்கா அவ்வப்போது ஏதேனும் தடைக்கற்களை அமைத்து வருகிறது. 2019ஆம் ஆண்டே சீனாவின் ஹுவாவே நிறுவனத்துக்கு அப்போதைய அதிபர் டிரம்ப் தடைவிதித்தார்.
ஹூவாவே நிறுவன செல்போன்களில் பயன்படுத்துள்ள சிப்செட் என்பது அமெரிக்காவின் உதவி இல்லாமல் சாத்தியமே இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். சீனாவில் அமெரிக்க தயாரிப்பான ஐபோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 10 மில்லியன் செல்போன்கள் விற்பனை பாதிக்கப்படும் என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா கணித்துள்ளது.