ஆமா இந்த SUVனா என்ன? இதுக்கு எம்புட்டு டேக்ஸ் போட்றது?
6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது சரக்கு மற்றும் சேவை வரி. குறிப்பிட்ட இந்த வரி அமலானதில் இருந்து எந்த காருக்கு எந்த வரி விதிக்க வேண்டும் என்ற தெளிவு இதுவரை கிடைக்கவில்லை என்பதால் கார் உற்பத்தியாளர்களும்,கார் வாங்குவோரும் தொடர்ந்து குழம்பி வருகின்றனர். இதனை சரிசெய்ய மத்திய அரசு தெளிவான திட்டங்களை வகுத்து வருகிறது. கார்கள் மட்டுமில்லை எந்த வகை ஆட்டோமொபைல் வாங்கினாலும் அதற்கு தற்போது வரை 28% ஜிஎஸ்டி உள்ளது.இதேபேல் காம்பன்சேஷன் செஸ் என்ற வசதியும் உள்ளது. SUV (sports utility vehicle) ரக கார்களுக்கு 20-22% செஸ் வரி விதிக்கப்படுகிறது. ஏன் இதற்கு இத்தனை வரி என்பதற்கு 4 காரணிகள் உள்ளன, 4 மீட்டர் நீளமும்,170 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸுக்கும் அதிகமாக இருக்க வேண்டும், பெட்ரோலாக இருந்தால் 1.2லிட்டர்,டீசலாக இருந்தால் 1.5 லிட்டர் இஞ்சின் இருக்க வேண்டும். இன்று சந்தையில் விற்கப்படும் SUV வகை கார்களில் பெரும்பாலனவை இந்த 4 காரணிகளை பின்பற்றுவதே இல்லை. காரின் அளவு குறைவதால் அதற்கு செஸ் வரியாக 1 முதல் 3 % மட்டுமே விதிக்கப்படுகிறது. மகேந்திரா தார் நிறுவன கார் 4-ல் 2 காரணிகள் கூட எட்டவில்லை ஆனாலும் அதற்கு 20%செஸ் வரி விதிக்கப்படுகிறது. கியா காரன்ஸ், மாருதி எர்டிகா ஆகிய கார்கள் மல்டியுடிலிட்டி வகையில் இருக்கிறது. ஆனால் அதற்கு செஸ் வரி 17% மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஒரு எஸ்யுவி இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு உரிய உலகளாவிய காரணிகளோ,வரைமுறைகளோ இதுவரை இல்லை. இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான SUV கார்கள் உலகளாவிய சந்தையில் Suvக்கான எந்த போட்டியிலும் இல்லை.