எல்ஐசி செய்த காரியம்!!!!!
இந்தியாவின் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாக இருந்த எல்.ஐ.சி அண்மையில் அதன் பங்குகளில் சில பகுதிகளை தனியாருக்கும் பாலிசிதாரர்களுக்கும் விற்றுள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் பெரிய பணக்காரரான அதானி குழுமத்தில் எல்ஐசி அதிக முதலீடுகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்த தரவுகளை பிரபல பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்துள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் அதானி குழுமத்தில் எல்ஐசி 7 நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்திருக்கிறது. அதாவது 74ஆயிரத்து 142 கோடி ரூபாய் அளவுக்கு இந்த முதலீடு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதானியின் மொத்த சொத்து மதிப்பில் எல்ஐசி செய்துள்ள முதலீடுகள் மட்டும் 3.9%ஆக உள்ளது. அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி டோட்டல் கேஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்களில் கடந்த 2020ம் ஆண்டு 1விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்த எல்ஐசியின் முதலீடு, தற்போது 4 அல்லது 5 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது. இரண்டே ஆண்டுகளில் பெரும்தொகையை எல்ஐசி அதானியின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதானி குழுமத்துக்கு அடுத்தபடியாக டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்களில் எல்ஐசி அதிக முதலீடுகளை செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.