கோடக் வங்கியில் புதிய கிரிடிட் கார்டு கேட்டோரின் நிலை என்னவாகும்?
தகவல் தொழில்நுட்ப குறைபாடுகளை காரணம் காட்டி அண்மையில் கோடக் மகிந்திரா வங்கிக்கு சில கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ள நிலையில், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்திருக்கின்றனர். இது பற்றி ஒரு தெளிவு பெறவே இந்த பதிவாகும். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் பழைய கணக்குகளில் பாதிப்பு வருமோ என்ற அச்சம் வேண்டாம், அதில் எந்த மாற்றமும் கிடையாது.வழக்கம் போல டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்டவற்றை அளிக்கலாம் என்றும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி கோடக் மகிந்திரா வங்கியின் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் சேவை பாதிப்பை சந்தித்தனர். இதன் விளைவாகத்தான் கோடக் வங்கிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆன்லைன் மற்றும் மொபைல் செயலியில் மட்டுமே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க முடியாதே தவிர்த்து நேரடியாக புதிய கணக்குகளை தொடங்க முடியும், ஆனால் புதிய கிரெடிட் கார்டு மட்டும் கிடைக்காது. ஏப்ரல்23 ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் அளித்திருந்தால் எல்லா வகையான சேவைகளும் கிடைக்கும் என்றும், புதிய வாடிக்கையாளர்களின் சேவைகள் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒருவருக்கு கோடக் மகிந்திரா வங்கியில் சம்பளக்கணக்கு அல்லது சேமிப்புக்கணக்கு இருப்பதாக வைத்துக் கொள்வோம், அவர் கடன் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தால் அவரால் கடனை பெற முடியாது. புதிய வாடிக்கையாளராக ஆன்லைனில் சேர முடியாத நிலையில் எப்போது இந்த தடை நீங்கும் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.,அதற்கு பதில் தரவேண்டியது ரிசர்வ் வங்கியும் கோடக் வங்கியும்தான். ஏனெனில் ரிசர்வ் வங்கி மட்டமே இறுதி முடிவு எடுக்கப்படும். குத்துமதிப்பாக 7 முதல் 8 மாதங்களுக்கு புதிய கிரிடிட் கார்டுகளை கோடக் மகிந்திரா வங்கி பாதிப்பை சந்திக்க இருக்கிறது.