கருங்கடல் உணவுதானிய ஒப்பந்தத்தில் என்ன புதுசு?
உக்ரைனில் இருந்து உணவுப்பொருட்களை கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்வதே கருங்கடல் உணவு தானிய ஒப்பந்தமாகும். இதில் இருந்து அண்மையில் ரஷ்யா விலகுவதாக அறிவித்துள்ளது. உணவுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் உக்ரைன் முன்னணியில் இருந்தது. ஆனால் ரஷ்யாவுடனான போரால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்காவும் துருக்கியும் தலையிட்டு கருங்கடல் ஒப்பந்த்தில் சிக்கல் இன்றி தொடர பஞ்சாயத்து செய்தனர். இதன் விளைவாக உணவுப்பொருட்கள் விலை கணிசமாக குறைந்தன. எதியோப்பியா,சோமாலியா,ஏமன் நாடுகளுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உக்ரைனில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.ரஷ்யா இந்த ஒப்பந்ததில் இருந்து விலகியதால் வரும் நாட்களில் பிரெட் மற்றும் பாஸ்தா ஆகியவற்றின் விலை கணிசமாக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. ஐநாவின் தரவுகளின்படி உலகம் முழுவதும் கடந்தாண்டு 34 கோடி பேர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலகவில் கோதுமை உற்பத்தி சரிந்துள்ள போதும், பிரேசிலில் இருந்து மக்காசோள உற்பத்தி அதிகரித்துள்ளது. பசிப்பட்டினியை போக்க உக்ரைனிடம் உணவுப்பொருட்களை ஐநா வாங்கி வந்த நிலையில் கருங்கடல் ஒப்பந்ததில் மாறுதல் ஏற்பட்டுள்ளதால் இன்னும் அதிக தொகைக்கு உணவுப்பொருட்களை ஐநா வேறு வழியாக வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆப்ரிக்க நாடுகளின் பசிப்பிரச்னைகளை தீர்க இயலாத சிக்கல் மேலும் வலுத்துள்ளது. பணப்பரிவர்த்தனைகளுக்கான ஸ்விஃப்ட் நெட்வொர்க்கை அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து துண்டித்துவிட்ட நிலையில், மீண்டும் ஸ்விஃப்ட் நெட்வொர்க் வேண்டும் என்று ரஷ்யா கூறியது. இதனை ஏற்க மறுத்ததால் கருங்கடல் உணவு தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியுள்ளது. கருங்கடல் வர்த்தக ஒப்பந்தம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐரோப்பிய ஒன்றியம் வழியாக அனுப்ப உக்ரைன் திட்டமிட்டுள்ளது. வெவ்வேறு ரயில் பெட்டிகள் வழியாக எடுத்துச்செல்வதாலும் உணவு தானிய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உக்ரைனில் அதிக உணவு தானியங்கள் விளைந்தாலும் அவற்றை ஏற்றுமதி செய்வதில் காலதாமதம் ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது..