இந்த வாரம் சந்தையில் என்ன புதுசு..

ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் தொடங்கும் வாரத்தில் எந்த புதிய ஆரம்ப பங்கு வெளியீடும் இல்லை. அதே நேரம் fpo எனப்படும் தொடர் பங்கு வெளியீடுகள் உள்ளன. குறிப்பாக வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் fpo உள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைதொடர்பு நிறுவனமான இந்த நிறுவனம் 18 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை fpo வாயிலாக திரட்டப்பட்டதிலேயே இந்த தொகைதான் அதிகமாகும். வரும் 18 ஆம் தேதி தொடங்கும் fpo,வரும் 22 ஆம் தேதி முடிகிறது. 1636 கோடி ஈக்விட்டி பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 10-11 ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி வாங்க விரும்புவோர் 1298 ஈக்விட்டி பங்குகளாக ,எத்தனை கலெக்சன் வேண்டுமோ அத்தனையை மொத்தமாக மட்டுமே வாங்க முடியும்.. sme பிரிவில், சுத்திகரிக்கப்பட்ட அரிசி எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான ராம் தேவ்பாபா சால்வண்ட் நிறுவனம் ஆரம்ப பங்கு வர்த்தகத்தை 15 ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு பங்கின் விலை 80 ரூபாய் முதல் 85 ரூபாயாக உள்ளது. 50.27 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட 59.13 லட்சம் ஈக்விட்டிகளை அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆரம்ப பங்கு வெளியீடு வரும் 18 ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது. கிரில் ஸ்பிலன்டர் சர்வீசஸ்
பேக்கிங் தொழிலில் புகழ்பெற்று விளங்கும் இந்நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீடு வரும் 15 முதல் 18 ஆம் தேதி வரை விற்பனைக்கு வருகிறது. ஒரு பங்கின் விலையாக 120 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16.47 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கிரீன் ஹைடெக் வெஞ்சர்ஸ் IPO பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் அந்நிறுவனம் 6.3 கோடி ரூபாய் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு பங்கின் விலை 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் இந்த பங்கு சந்தையில் உள்ளது. DCGwires, Teerth Gopicon ஆகிய நிறுவனங்கள் முறையே டிசிஜி வயர்ஸில் முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. டிசிஜி வயர்ஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை விடவும் 15.82 மடங்கு அதிகமாகவும், டீர்த் கோபிகோன் நிறுவனம் 67.2 முறையும் அதிகம் விற்கப்பட்டன.