நண்பா உனக்கு என்னடா ஆச்சு ??? ஏன் இந்த முடிவு ?
கச்சா எண்ணெய் உற்பத்தியை எந்த நாடு செய்கிறதோ அந்த நாட்டுடன் இந்தியா கண்டிப்பாக நட்புறவு கொண்டிருக்கும். அந்தளவுக்கு இந்திய பொருளாதாரம் கச்சா எண்ணெயை நம்பி இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனுடனான போர் காரணமாக ரஷ்யா மலிவு விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை அளித்து வருகிறது. இந்த நிலையில் வரும் ஜுன் மாதம் வரை ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல் அளவுக்கு கச்சா எண்ணெயை நிறுத்தப்போவதாக ரஷ்யா அண்மையில் அறிவித்தது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா கச்சா எண்ணெயை தங்கள் நாட்டுக்கு விற்கக்கூடாது என்று மார்ச் மாதம் வரை மட்டுமே கெடு வைத்த நிலையில் ரஷ்யா வரும் ஜூன் மாதம் வரை உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் தடை காரணமாக ரஷ்யாவுக்கு கிடைத்து வந்த கச்சா எண்ணெய் வருவாய் கடந்தாண்டை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட பாதியாக சரிந்துள்ளது.நண்பனுக்கு ஒரு பிரச்னை என்றால் ஓடிப் போய் உதவிய இந்தியாவுக்கு,பல ரஷ்யாவும் பல சந்தர்ப்பங்களில் உதவி செய்துள்ளது.இந்த நிலையில் நண்பன் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளதால் அது தங்களுக்கு பாதகமாக அமையும் என்று இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.