வாட்ஸ்அப் செயலியில் இருந்து 22 லட்சம் இந்தியக் கணக்குகள் முடக்கம் !
வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை 22 லட்சத்திற்கும் மேலான இந்தியக் கணக்குகளை முடக்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, +91 என்ற தேசிய தொலைபேசிக் குறியீட்டை வைத்து இத்தகைய முரணான கணக்குகளை அடையாளம் கண்டதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இன்றைக்கு சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற போன்ற சமூக இணைய செயலிகளைப் பயன்படுத்தாதவர்களே கிடையாது. அதிலும் குறிப்பாக, வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களே கிடையாது எனலாம். மூன்றாம் தரப்பானது, வாட்ஸ்அப்பின் தகவல்களையோ, அழைப்புகளையோ இடைமறித்து கேட்பது அல்லது அதன் செய்திகளை பார்ப்பது இயலாது என்று கூறப்படுகிறது. ஆகவேதான் இளைய தலைமுறையிடம் வாட்ஸ்அப் அதிகமான செல்வாக்குடன் இருக்கிறது.
அப்படிப்பட்ட வாட்ஸ்அப் தான் 22 லட்சத்திற்கும் மேலான அதன் வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளது, அது ஏன்? என்பதை நாம் பார்க்கலாம்.
“End-to-End என்கிரிப்ட்” செய்யப்பட்ட மெசேஜிங் சேவைகளில், தவறான பயன்பாடுகளைத் தடுப்பதில் வாட்ஸ்அப் முன்னணியில் உள்ளது. தொடர்ந்து, எதிர்காலத்திலும் பயனர்கள் எங்கள் தளத்தில் பாதுகாப்பான முறையில் சேவைகளைப் பயன்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நவீன தொழில்நுட்பம் போன்றவற்றில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்” என்று இந்திய வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் 95 சதவீத பயனாளர்கள் தடை செய்யப்பட்டதற்கான முதன்மைக் காரணம் ஸ்பேம் எனப்படும் தேவையற்ற செய்திகள் அல்லது தகவல்கள் ஆகும். வாட்ஸ்அப் தனது தளத்தில் முறைகேடுகளை தடுக்கத் தடை செய்யும் கணக்குகளின் உலகளாவிய சராசரி எண்ணிக்கை மாதத்திற்கு சுமார் 80 லட்சம் கணக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.