புதிய வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது வாட்சாப்
வாட்சாப்பில் ஆன்லைன் ஸ்டேட்டஸை தனது குழுவில் உள்ள நபர்களோ அல்லது தனது தொடர்புகளில் உள்ள நபர்களிடமிருந்தோ மறைக்க ஒரு புதிய வசதியை வாட்சாப் அறிமுகப் படுத்தியுள்ளது.
அதன்படி அனைத்து வாட்சாப் தொடர்புகளும் அல்லது கடைசியாக இருந்த நேரத்தை புதியதாக அறிமுகப்படுத்திய இரண்டு தொழில்நுட்ப அம்சத்தில் அனைவரும் பார்க்க இயலும்,
’எனது கான்டாக்ட் தவிர’ என்ற ஆப்ஷனை நீங்கள் தெரிவு செய்யும்பட்சத்தில் உங்களுக்கு தேவையில்லாதவர் அதைப் பார்க்க அனுமதி இல்லை. ’தேவைப்படாத நபர்கள்’ என்ற புதிய ஆப்ஷனில் உங்கள் ஸ்டேட்டஸை உங்கள் கான்டாக்டில் உள்ள நபர்களோ அல்லது வாட்சப்பில் உள்ள நபர்களோ பார்க்க இயலாது.
அதேபோல், வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் பதிவிட்ட செய்திகளை, குழுவின் அட்மின் நிரந்தரமாக டெலிட் செய்வதற்கான வசதியும் கொண்டு வரப்பட உள்ளது.
ஏற்கனவே வாட்ஸ் ஆப் பீட்டா சோதனையாளர்களுக்கு (Whatsapp Beta Testers) மட்டும் இந்த 2 வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சங்கள் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.