இந்தியர்கள் பணக்காரர்கள் ஆவது எப்போது?
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் அண்மையில் பேட்டி ஒன்றில் மிகவும் கடினமான கேள்வியை முன்வைத்தார். அதில் இந்தியா வயதாவதற்குள் இந்தியர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுவார்களா என்று கேட்டார். உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருந்தாலும் தற்போது இந்தியா ஏழை நாடுதான் என்றார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதகரித்து வருவதாக கூறியுள்ள இவர், அவர்களுக்கும் வேலைவாய்ப்பை அளித்தால் இன்னும் வேகமாக இந்தியா வளரும் என்றார். இந்திய நிலப்பரப்பின் சிறப்பம்சத்தை சரியாக பயன்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தால் இந்தியா நிச்சயம் வேகமாக வளரும் என ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டு பேசிய அவர், இந்தியா உள்நாட்டு உற்பத்தியில் அண்மையில் பிரிட்டனை மிஞ்சியுள்ளதாகவும், பல வளர்ந்த நாடுகளை விட இந்தியா சிறப்பாக உள்ளது என்றார். விரைவில் ஜப்பான், ஜெர்மனியை இந்தியா மிஞ்சிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.5 விழுக்காடாக இருந்தால் எப்படி 2047-ல் இந்தியா வளர்ச்சி அடையும், இந்த வளர்ச்சி விகிதம் போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்களை இரண்டாம் தர குடிமகன்களாக நடத்தக்கூடாது என்றும் பிரதமர் மோடியை மறைமுகமாக திட்டினார்.