மீண்டும் எப்ப ஆரம்பிக்குமோ அக்சஞ்சர்??
அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பலநாடுகளிலும் பொருளாதார மந்த நிலை தலை தூக்கியிருக்கும் சூழலில் பல பெரிய டெக் நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையாக முதலில் கைவைத்தது ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தான். இதில் ஆப்பிளைத் தவிர்த்து வேறு எந்த பெரிய நிறுவனங்களும் தப்பவில்லை. இந்த நிலையில் அண்மையில் கொத்துக்கொத்தாக டெக் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு வேலை போனது. இதில் அக்சென்சர் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது. இந்த சூழலில் பழைய திட்டங்களையே முடிக்காமல் கிடக்கும் அக்சன்சர் நிறுவனம் தனது கிளைண்ட்களிடம் கெஞ்சி கூத்தாடி புதிய திட்டங்களை வாங்கும் சூழலும் உருவாக அதிக வாய்ப்புள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, புதிதாக அக்சென்சர் நிறுவனத்தில் ஆட்களை சேர்க்க நடத்தப்பட்ட கேம்பஸ் இன்டர்வியூ என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பலருக்கு ஆஃபர் லெட்டர் அனுப்பிய அக்சென்சர் நிறுவனம் , தற்போது வேலையில் சேரும் தேதியை மாற்றி அமைத்துள்ளது. போதுமான புராஜெக்ட்கள் கைவசம் இல்லாத நிலையில் தேவைக்கு ஏற்ற அளவில்தான் பணியாளர்களை நியமிக்க முடியும் என்றும் கூறியுள்ளது. அக்சன்சர் வேலைக்கு அழைக்கும் அழைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஊழியர்கள் கிடைத்த வேறு நல்ல வாய்ப்புகளையும் இதற்காக விட்டுவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். புளும்பர்க் நிறுவன அறிக்கையின்படி,வரும் நாட்களில் புதிதாக வேலைக்கு சேர இருந்தோருக்கு பணிகள் வழங்குவது மேலும் கூட தாமதமாகும் என்கிறது புள்ளிவிவரம்.