மஸ்க் கொடுத்த காசு எங்க போச்சி..??
வித்தியாசங்களுக்கு பெயர் பெற்றவர் எலான் மஸ்க், இவர் கடந்தாண்டில் 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெயர் குறிப்பிடாத நிறுவனத்துக்கு தானமாக அளித்தார். இந்த பணம் எங்கே சென்றது என்பதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. தொழிலில் உச்சத்தில் இருந்த மஸ்க், கையில் இருந்த பணத்தை தனது சொந்த தொண்டு நிறுவனத்துக்குத் தான் அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இப்படி பணம் செலுத்திக்கொண்டதை அடுத்து அமெரிக்காவிலேயே பெரிய தொகை வைத்திருக்கும் தொண்டு நிறுவனம் என்ற பெருமையை மஸ்கின் நிறுவனம் பெற்றுள்ளது. கோடி கோடியாக சம்பாதித்தாலும் தருவதற்கு ஒரு தனி மனது வேண்டும் என்று கூறுவார்களே,அதேபோல மருத்துவமனைகள், ஆய்வு நிறுவனங்களுக்கும் மஸ்க் பெரிய தொகையை அளித்துள்ளார். அதாவது செயிண்ட் ஜூட் மருத்துவமனைக்கு 55 மில்லியன் டாலர் பணத்தையும்,எக்ஸ்பிரைஸ் நிறுவனத்துக்கு 54 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தையும் மஸ்க் அளித்துள்ளார். பெரிய தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் மஸ்க்,அமெரிக்காவிலேயே அதிக வரி செலுத்தும் தனிநபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஏற்கனவே சம்பாதித்த பெரிய பணத்தில் பில்கேட்ஸ் ஒரு பெரிய பங்கை மருத்துவ ஆய்வு, ஆதரவற்றோருக்கு அளித்து வந்த நிலையில் அவர் பாணியிலேயே மஸ்க் தற்போது பணம் அளித்துள்ளார்.